கடுமையான வறட்சி காரணமாக சோமாலியாவில் குறைந்தது இருபதாயிரம் குழந்தைகள் இறப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக சேவ் தி சில்ரன் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சேவ் தி சில்ரன் அமைப்பும் வேறு இரண்டு தொண்டு நிறுவனங்களும்; இணைந்து மேற்கொண்ட ஆய்வில் சோமாலியாவின் ஒன்பது மாவட்டங்களில் சுமார் அரைவாசி மாவட்டங்களில் அதிக அளவில் ஊட்டச்சத்து குறைபாடுகள் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில் உயிர் காக்கும் உதவிகளை சோமாலியாவிற்கு வழங்குமாறு சர்வதேச சமூகத்திடம் சேவ் தி சில்ட்ரன் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சோமாலியாவில் கடுமையான வறட்சியின் காரணமாக தட்டம்மை பரவலால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என ஐநாவின் குழந்தைகள் முகாமை தெரிவித்த அடுத்த சில தினங்களில் இந்த எச்சரிக்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது