ராமேஸ்வரத்தில் 15 கோடி ரூபா செலவில் அப்துல்கலாம் மணிமண்டபம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த மணி மண்டபத்தை இந்திய பிரதமர் நரேந்திரமோடி எதிர்வரும் 27ம்திகதி திறந்து வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் சொந்த ஊர் ராமேசுவரம் ஆகும். அவர் மறைந்த பின்பு, அவரது உடல் ராமேசுவரத்தில் உள்ள பேக்கரும்பு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அங்கு இந்திய மத்திய அரசு சார்பில் 50 கோடி ரூபா செலவில் மணிமண்டபமும், அறிவுசார் மையமும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் முதற்கட்டமாக் மணிமண்டபம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.