180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடந்த ஐந்து மாதங்களில் 39 லட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன. குற்ற விசாரணைப் பிரிவினால் இவ்வாறு போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் 31ம் திகதி வரையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களில் போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
போலி நாணயத்தாள்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்திருந்தால் அது குறித்து 0112326670 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என அறிவிக்க்பபட்டுள்ளது.
Spread the love