179
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தபால் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடு தழுவிய ரீதியில் சில நாட்களாக தபால் தொழிற்சங்கம் போராட்டத்தை நடத்தி வந்திருந்திருந்தனர்.
இந்த நிலையில் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முடித்துக் கொள்வதாக ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.தபால் மா அதிபர் ரோஹன அபேரட்னவினால் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக அடிப்படையில் வேலை நிறுத்தப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீர்வுத் திட்டமொன்றை வழங்குவதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் பணிக்கு திரும்புவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
Spread the love