குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யப் போவதில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். புதிய சட்டத்தினை அறிமுகம் செய்வதன் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என்று அர்த்தப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ள அவர் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படக்கூடிய எந்தவொரு சந்தர்ப்பமும் வழங்கப்படாது என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரிய பல நாடுகள் இன்று மீளவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பலப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் அனைத்து தரப்பினரும் இணைந்து தீர்மானங்களை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வது குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திற்கும் தற்போதைய சூழ்நிலைக்கும் நிறைய வேறுபாடு உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.