குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க பதவி விலக வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் இணங்கவில்லை என்றால் அவர் பதவி விலக வேண்டுமென வாசுதேவ நாணயக்கார கோரியுள்ளார்.
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் சம்பிக்க ரணவக்க வெளியிட்ட கருத்து அரசாங்கத்தின் கருத்துக்கு புறம்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவை கூட்டாக இணைந்து தீர்மானம் எடுத்துள்ள நிலையில் அமைச்சர் ரணவக்க மாற்றுக் கருத்தைக் கொண்டிருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் இணங்கிய சம்பிக்க, ஊடகங்களில் மாற்றுக் கருத்தை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.