குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்ற உறப்பினர் வாசுதேவ நாணயக்காரவின் அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் சீன நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையை ரத்து செய்யுமாறு கோரி வாசுதேவ நாணயக்கார அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த சீன நிறுவனங்களுடன் உடன்படிக்கை கைச்சாத்திடுவது தொடர்பிலான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்ட காலத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்த மனுதாரர் அமைச்சரவை அமைச்சராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விடயங்கள் குறித்து நன்றாக தெரிந்து கொண்டே வேண்டுமென்றே ஆட்சியில் இருக்கும் காலம் வரையில் வேண்டுமென்றே தகவல்களை நீதிமன்றிற்கு மூடி மறைத்துள்ளதாக நீதவான்கள் வாசுதேவ நாணயக்கார மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.