164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடும்போக்குடைய பௌத்த பிக்கு ஒருவரை ஏன் எதிர்க்கக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அவரது ஆதரவு தரப்புக்களும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரரின் பொதுபல சேனா உருவாகுவதற்கு மஹிந்த ஆதரவளித்திருந்தார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். பௌத்த பிக்குகள் விமர்சனம் செய்யப்படுவதற்கு மாநாயக்க தேரர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love