195
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அனைத்து இலங்கையர்களும் சுயமரியாதையுடன் வாழக்கூடிய தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைற்றிங் ( Shelley Whiting ) தெரிவித்துள்ளார்.
150ம் கனேடிய தின நிகழ்வுகளை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மத, இன, பால் நிலை அல்லது மொழி அடிப்படையில் இலங்கையில் எவரும் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கைக்கும் கனடாவிற்கும் இடையில் மிக நீண்ட கால உறவுகள் நீடித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love