குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் இது குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுவான இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாகவும் புதிய தேர்தல் முறையின் அடிப்படையில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது குறித்து கட்சி மட்டத்தில் பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலும் எதிர்வரும் செப்டம்பர் மாத நிறைவிற்குள் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்த சாத்தியம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.