பாகிஸ்தானில் உள்ள சிறைச்சாலைகளில் சிறை வைக்கப்பட்டுள்ள 546 இந்தியர்களின் பட்டியல் இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கவுதம் பம்பாவாலேயிடம் குறித்த பட்டியல் கையளிக்கப்பட்டுள்ளது.
2008-ம் ஆண்டு, மே மாதம் 21ம் திகதி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கையெழுத்தான தூதரக அணுகல் ஒப்பந்தத்தின் கீழ், இந்த் பட்டியல் பாகிஸ்தானுக்கான இந்திய தூதரிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த 546 பேரில் 494 பேர் மீனவர்கள் என்பதுடன் ஏனைய 52 பேரும் சாதாரண பொதுமக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று இந்திய சிறைச்சாலைகளிலுள்ள பாகிஸ்தான் பிரஜைகளின் பட்டியலை இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரிடம் மத்திய அரசு வழங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.