குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய அரசியல் சாசனம் அமைக்கப்படுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது என கண்டி அஸ்கிரி பீடம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்க முயற்சித்தால் அதற்கு ஒட்டுமொத்த பௌத்த பிக்குகளும் எதிர்ப்பை வெளியிடுவர் என அஸ்கிரி பீடப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகள் கண்டி அஸ்கிரி பீடத்தில், அந்தப் பீடத்தின் பிரதிநிதிகளை நேற்றைய தினம் சந்தித்திருந்த போது புதிய அரசியல் சாசனம் அமைக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அஸ்கிரி பீடத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
தேர்தல் முறையில் காணப்படும் குறைபாடுகள் உள்ளிட்ட சில விடயங்களில் திருத்தங்களை செய்வதில் பிரச்சினை கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர்கள் புதிய அரசியல் சாசனம் தேவையில்லை எனவும் ஜனாதிபதி அதிகாரங்கள் தொடர்ந்தும் நீடிக்கப்பட வேண்டும் போன்ற விடயங்கள் கோரப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.