குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
முஸ்லிம் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொள்வது குறித்து கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் அனைத்து முஸ்லிம் சமூகங்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் இவ்வாறு கூட்டணி ஒன்று அமைக்கப்பட உள்ளது.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது இவ்வாறு முஸ்லிம் கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
வடக்கின் தமிழ் மக்கள் எந்தவொரு பிரச்சினையையும் தைரியமாக எதிர்கொள்வதற்கு அவர்களின் ஒற்றுமையே காரணம் என சுட்டிக்காட்டியுள்ள அவர் இலங்கை முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் இவ்வாறான ஓற்றுமையை காணக்கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஓர் கூட்டணி அமைக்கப்பட வேணடுமென முஸ்லிம் புத்திஜீவிகள் கோரிக்கை விடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் அநேகமாக முஸ்லிம் கட்சிகள் ஏனைய பிரதான கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு உதவிகளையே வழங்கி வந்தன என குறிப்பிட்டுள்ளார்.