குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜெர்மனியை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்கள் அதிகளவில் இடம்பெறக்கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சைபர் தாக்குதல்கள், இணைய வழி உளவு பார்த்தல் நடவடிக்கைகள் அதிகளவில் ஜெர்மனியில் இடம்பெறக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
துருக்கி, ரஸ்யா மற்றும் சீனா போன்ற அரசாங்கங்கள் இவ்வாறு ஜெர்மனி மீது தாக்குதல் நடத்தக்கூடிய சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சைபர் தாக்குதல்களினால் பல பில்லியன் யூரோக்கள் நட்டமேற்படக் கூடும் எனவும், சிறிய நடுத்தர வர்த்தக நடவடிக்கைகள் அதிகளவில் பாதிப்படையும் எனவும் ஜெர்மன் அரசாங்க அறிக்கையொன்று தெரிவித்துள்ளது