குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் சாசனத்தின் உள்ளடக்கம் தொடர்பில் மாநாயக்க தேரர்களுக்கு எதுவும் தெரியாது என ஜே.வி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனத்தில் எவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதனை தெரிந்து கொள்ளாமலேயே மாநாயக்க தேரர்கள் இந்த அரசியல் சாசன யோசனையை நிராகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இனவாத தரப்புக்கள் மாநாயக்க தேரர்களை பிழையாக வழிநடத்தி உள்ளதாகவும் நாட்டுக்கு தீங்கு ஏற்படக்கூடிய வகையில் அரசியல் சாசனம் அமையும் என கருதியே இவ்வாறு புதிய அரசியல் சாசனத்தை மாநாயக்க தேரர்கள் எதிர்க்கின்றார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசியல் சாசனம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் மூன்று பீடங்களின் மாநாயக்க தேரர்களுக்கும் முன்கூட்டியே தெளிவுபடுத்தியிருந்தால் இவ்வாறான ஓர் நெருக்கடி நிலைமை உருவாகியிருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயகம் எந்தவொரு மதத்தையும் பாதிக்காது எனவும், மதவாத அடிப்படையில் அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கக் கூடாது எனவும் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.