191
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பலவந்த காணாமல் போதல்கள் தொடர்பான உத்தேச சட்டம் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலிலிருந்து நீக்கப்படவில்லை என உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
இந்த உத்தேச சட்டம் நேற்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த போதும் இறுதி நேரத்தில் விவாதம் ஒத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பில் சில ஊடகங்களில் பிழையான செய்தி வெளியிடப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ள அமைச்சர் இந்த உத்தேச சட்டம் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மையில்லை என குறிப்பிட்டுள்ளார்.
Spread the love