குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அரசியல் சாசனத்தில் திருத்தங்களைச் செய்ய மக்கள், இந்த அரசாங்கத்திற்கு அனுமதியளிக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அரசியல் சாசனத்தில் திருத்தங்களை செய்ய அனுமதிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் வாக்குறுதியளித்துள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதியை நம்பியே 6.2 மில்லியன் மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளனர் எனவும் எனவே ஜனாதிபதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது எனவும் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனத் திருத்தங்கள் செய்த பல நாடுகளின் நிலைமை துயர் மிகுந்ததாகவே காணப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ள அவர் நாட்டை துயர் மிக்க ஓர் நிலைக்கு ஜனாதிபதி இட்டுச் செல்ல மாட்டார் என தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.