இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படை கூட்டுப் பயிற்சி வங்காள விரிகுடா கடல் பகுதியில் இன்று ஆரம்பமாகின்றது. இன்று முதல் தொடர்ந்து 11 நாட்கள் இந்த கூட்டுபயிற்சி நடைபெறவுள்ளது.
இந்திய – அமெரிக்க கடற்படை கள் இணைந்து கடந்த 1992-ம் ஆண்டு முதல் மேற்கொண்டு வரும் மலபார் கூட்டுப் பயிற்சியில் கடந்த 2007-ம் ஆண்டு ஜப்பான் முதல்முறையாக பங்கேற்றது. கடந்த 2015-ம் ஆண்டு ஜப்பான் இந்த கூட்டுப் பயிற்சியில் நிரந்தர மாக இணைந்தது.
இந்த மலபார் கூட்டு கடற்பயிற்சி கடந்த வருடம் தென் சீன கடல் பகுதியில் நடைபெற்ற நிலையில் இந்த வருடம் வங்காள விரிகுடா கடல் பகுதியில் நடைபெறுகின்றது.
இதில், துறைமுகம் மற்றும் கடல் பகுதி என இரண்டு இடங்களிலும் பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சியின்போது, ஒவ்வொரு நாட்டின் போர்க்கப்பல்களின் செயல்பாடுகள், நீர்மூழ்கிக் கப்பல் தடுப்புப் போர் பயிற்சி, வான் வெளித் தாக்குதலை எதிர்கொள்வது,; உட்பட பல்வேறு பயிற்சிகள் மேற் கொள்ளப்பட உள்ளன.