குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜெர்மனியில் இன்று ஆரம்பமாகின்ற ஜீ20 மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் திரேசா மே பயங்கரவாத நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் வலியுறுத்த உள்ளார்.
உலக நிதி முறைமையில் பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களுக்கு இடமளிக்கக் கூடாது என அவர் வலியுறுத்த உள்ளார்.
சிறிய அளவிலான நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் முதல் பாரியளவிலான கொடுக்கல் வாங்கல்கள் வரையில் கண்காணிக்கப்பட்டு அவை முறியடிக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்ட உள்ளார்.
சிரியா மற்றும் ஈராக்கிலிருந்து வெளிநாட்டு போராளிகள் காணாமல் போவது குறித்தும் கண்காணிப்பு செய்ய வேண்டுமென திரேசா மே வலியுறுத்த உள்ளார்.
பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அனைத்து கோணங்களின் ஊடாகவும் முறியடிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட உள்ளார்.