குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்ய விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதிகள் தவறிழைக்கின்றனர் என வொஸிங்டன் நிறுவகத்தின் ரஸ்ய வெளியுறவுக் கொள்கை பற்றிய நிபுணர் அனா போச்சேஸ்காயா (Anna Borshchevskaya ) தெரிவித்துள்ளார்.
அநேகமான அமெரிக்க ஜனாதிபதிகள் தங்களுக்கு முன்னர் ஆட்சி செய்த ஜனாதிபதிகள் ரஸ்ய விவகாரத்தை உரிய முறையில் அணுக வில்லை என்றே கருதுகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ள அவர் எனினும் அவ்வாறான ஓர் நிலைமை கிடையாது என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமைக்கு ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினே காரணம் என தெரிவித்துள்ள அவர் ரஸ்யாவில் ஜனநாயகத்தை நிலைநாட்டவோ, ரஸ்யா மேற்குலக நாடுகள் மீது நெருங்குவதனையோ புட்டின் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
இதனை புரிந்து கொள்ளாத அமெரிக்க ஜனாதிபதிகள் ஒருவரின் பின்னர் ஒருவராக பிழையான அணுகுமுறைகளை பின்பற்றுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.