குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உமா ஓயா திட்டம் கைவிடப்படாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உமா ஓயா திட்டத்தின் 70 வீதமான பணிகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், அந்த திட்டத்தை கைவிடுவது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்தை முன்னெடுத்து வரும் ஈரானிய நிறுவனம் அனுபவமற்ற நிறுவனம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த திட்டத்தினால் 7000 வீடுகள் சேதமடைந்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும், 52 வீடுகள் மாத்திரமே சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டம் குறித்து சாத்திய ஆய்வு நடத்தப்படாது கடந்த அரசாங்கம் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.