குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றது என கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி மக்கள் அளித்த ஆணையின் அடிப்படையில் புதிய அரசியல் சாசனமொன்றை அமைப்பதில் தவறில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்துவதில் எவ்வித தவறும் கிடையாது என குறிப்பிட்டுள்ள ரோஹித்த பொகொல்லாகம சட்டம் நிறைவேற்றப்பட முன்னதாக மக்களின் கருத்துக்கள் அறியப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.