புதுச்சேரியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மேலும் ஆளுனர் கிரண்பேடியின் கொடும்பாவியை எரித்த அவர்கள் கிரண் பேடி புதுச்சேரியை விட்டு வெளியேற வேண்டும் என முழக்கமிட்டுள்ளனர்.
புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரை நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசுக்கு எதிராக செயல்படும் கிரண் பேடி புதுச்சேரியை விட்டு வெளியேற வலியுறுத்தியும் காங்கிரஸ் மற்றும் திமுக இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் முழு அடைப்பு காரணமாக ஆளுநர் மாளிகையில் காவல்துறையினர்; குவிக்கப்பட்டுள்ள போதும் அதனையும் மீறி காங்கிரஸ் கட்சியினர் திடீரென ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அவர்களை காவல்துறையினர் தடுக்க முயன்றதால் மோதல்நிலை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை புதுவையில் பா.ஜ.க. 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்கும்படி நான் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவில்லை. மத்திய அரசே அவர்களை நியமித்திருக்கிறது என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.