அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் நேற்று விசாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விசாரணையை வரும் 13ம் திகதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மீது 4 அன்னிய செலாவணி மோசடி வழக்குகளை அமலாக்கப்பிரிவினர் பதிவு செய்தனர்.
ஜெயா டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் இறக்குமதி செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக இந்த வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே காணொலி காட்சி மூலம் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் விசாரணை நடத்தி 3 வழக்குகளில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் 4-வது வழக்கு மாஜிஸ்திரேட்டு ஜாகீர் உசேன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காணொலி காட்சி மூலம் சசிகலாவிடம் விசாரணை நடத்தி; குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.