குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தனியார் மருத்துவ மனைகள் மற்றும் ஆய்வு கூடங்களில் இரத்த பரிசோதனை கட்டணம் குறித்த உத்தரவு மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார். டெங்கு நோய் தாக்கம் காரணமாக, இரத்த பரிசோதனை கட்டணங்களை குறைக்குமாறும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் வரையில் கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் எனவும் சுகாதார அமைச்சு கோரியிருந்தது.
சில தனியார் மருத்துவ மனைகள் மற்றும் ஆய்வு கூடங்கள் இரத்த பரிசோதனைக்காக கூடுதல் கட்டணத்தை அறவீடு செய்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இவ்வாறு அரசாங்க உத்தரவினை மீறி கட்டணத்தை அறவீடு செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.