குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காவல்துறையினருக்கு எதிராக 600 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தலைவர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். கடந்த ஆறு மாத காலத்தில் இவ்வாறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் காவல்துறையின் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக 1800 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் இவ்வாறு செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களினால் செய்யப்பட்ட முறைப்பாடுகளை விசாரணை செய்யாமை மற்றும் ஒரு பக்கச்சார்பாக செயற்படுதல் ஆகியனவே அதிகளவில் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு எதிராக செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளாகும்.
மேலும் லஞ்சம் பெற்றுக்கொண்ட குற்சற்சாட்டின் பேரில் இந்த ஆண்டில் ஐந்து காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.