189
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியாவின் லண்டனில் தீ விபத்துச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வடக்கு லண்டனின் மிகவும் பிரபல்யமான கம்டன் லொக் சந்தை (Camden Lock Market ) யில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இவ்வாறு தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் 70 தீயனைப்புப் படைவீரர்களும் பத்து தீயனைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தீ மிகவும் வேகமாக பரவியதாக நேரில் கண்ட சாட்சியொருவர் தெரிவித்துள்ளார்.
தீ விபத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரையில் பதிவாகவில்லை, எனினும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
Spread the love