167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையின் பல பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகிறது. தென் மாகாணத்தின் பிபிலே பகுதியில் கடுமையான காற்று வீசக்கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
Spread the love