171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டின் அனைத்து மக்களும் ஒரே விதமாக நடத்தப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இன, மத மற்றும் மொழி அடிப்படையில் மக்கள் பிரித்து பார்க்கப்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமவுரிமைகள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அலுத்கம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love