196
மராட்டிய மாநிலம் தெற்கு மும்பையில் ரிலையன்ஸ் குழும தலைவர் தொழிலதிபர் முகேஷ் அம்பானியில் பங்களா உள்ளது. ஆண்டிலியா என்று அழைக்கப்படும் இந்த பங்களா 27 மாடிகளை கொண்டது. சுமார் 600 பணியாளர்கள் வீட்டில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று இரவு வீட்டின் மேல்தளத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினை அடுத்து, தீயணைப்பு படையினர் 7 வாகனங்களில் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்தார்களா? என்ற தகவல்களும் வெளியாகவில்லை.
Spread the love