குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காட்டில் இளைஞர் ஒருவர் மீது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட துன்னாலையைச் சேர்ந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள், இன்று காலை இடம்பெறவுள்ள நிலையில், நெல்லியடி காவல் நிலையத்தில் இருந்து கொடிகாமம் செல்லும் அரசடி வீதிவரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, துன்னாலைப் பகுதியில், ஓரளவு அமைதியான நிலை காணப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதியற்ற முறையில், மணலை ஏற்றிச் சென்றபோது, காவற்துறையினர் தடுத்த போதும் அதனை மீறிச் சென்றதாக தெரிவித்து காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 24 வயதான யோகரசா தினேஸ் என்ற துன்னாலையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.