தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிர்வாகம் நிரந்தரமாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தி அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற பேரணி நேற்றையதினம் நடைபெற்றது.
கடந்த மாதம் 30ம்திகதி ஓஎன்ஜிசி எண்ணெய்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறியதனைக் கண்டித்து மக்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர் மீது காவல்துறையினர்; தடியடி நடத்தி அவர்களை கலைத்ததுடன் 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் கடையடைப்பு, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட் டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும், ஓஎன்ஜிசி நிர்வாகம் கிராமத்தை விட்டு முழுமையாக வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று அனைத்துக் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர் எனவும் அவர்கள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்இ இன்று தஞ்சை வணிகர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தஞ்சையை சுற்றியுள்ள திருவிடைமருதூர்இ ஆடுதுறைஇ பந்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 3000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக வணிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.