173
மூன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகளான ஏ.ஏ.பி.ஆர்.அமரசேக்கர, ஏ.எல்.ஷிரான் குணரத்ன மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி அரச தலைமை சட்ட ஆலோசகர் ஜனக் த சில்வா ஆகியோரே மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ அவர்களும் பிரசன்னமாகியிருந்தார்.
Spread the love