குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்திய மீனவர்கள் அத்து மீறுவதற்கு வடக்கு மீனவர்களே காரணம் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கு மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதனை அநேகமாக நிறுத்திக் கொண்டுள்ளதனால்தான் இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பினை ஆக்கிரமிப்பு செய்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் தற்பொழுது மிகவும் குறைந்தளவான நபர்களே மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர் எனவும் அவர்களும் வலைவீசி மீன்பிடியில் ஈடுபடுவோர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் அதிகளவான மீன் லொறிகள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு வந்ததாகவும் தற்போது அவ்வாறான ஓர் நிலையை காண முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தெற்கில் பலநாள் மீன்பிடிப் படகுகள் மூலம் மீன்பிடியில் ஈடுபடுகின்ற போதிலும், வடக்கில் அவ்வாறு மீன்பிடியில் ஈடுபடுவதில்லை என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
1 comment
இராணுவத் தளபதியின் மிக மோசமான கண்டுபிடிப்பு இது, என்று சொன்னால் அது தவறாகாது! மீனவர்கள் வேறு தொழில்களை நாடிச் செல்ல இவர்களின் ஆட்சிமுறை மற்றும் அடக்குமுறைதான் முதற் காரணமென்பதை இவர் எப்படி மறந்தார்? மீன்பிடித் தடையை எத்தனை தசாப்தங்கள் நடைமுறையில் வைத்திருந்தார்கள், என்பதைக் கூட இவர் அறியார் போலும்?
மேலும், ‘வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு என்ன விலை’, என்று இவர் எம்மிடமே கேட்கின்றாரே? அயல் தேச மீனவரின் அத்துமீறலைக் கட்டுப்படுத்தும்படி கேட்டால், அதற்கான பொருத்தமான பதிலைத் தராது, என்னவோ பிதற்றுகின்றாரே? இவரின் இடக்குப் பதிலைக் கேட்கும் எவருக்கும், புதிதாகத் தொழில் தொடங்கும் எண்ணம் எங்கிருந்து வரும்?