முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக் கும் ரவிச்சந்திரனுக்கு பரோல் விடுமுறை வழங்கக் கோரிய மனு மீது உள்துறை செயலர் 2 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவரது தாயாரானஸ ராஜேஸ் வரி உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் தாக்கல் செய்த மனுவில் தனது மகன் சாதாரண விடுப்பில் வந்து 2 ஆண்டுகள் முடிந்துவிட்டதால், மீண்டும் பரோல் கேட்பதற்கு உரிமை உண்டு.
எனவே, ஒரு மாதம் பரோல் விடுமுறை வழங்கக் கோரி மதுரை சிறை கண்காணிப்பாளருக்கு மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக உள்துறை செயலருக்கும் மனு அனுப்பப்பட்டது. இந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ரவிச் சந்திரனுக்கு பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பரோல் கோரிக்கையை பரிசீலனை செய்து 2 வாரங்களில் உள்துறை செயலர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
அத்துடன் பிரதான மனு தொடர்பாக மதுரை சிறைத் துறை கண்காணிப்பாளர், 3 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.