பத்தனை ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பாக தனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும் இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு உடனடியாக உரிய தண்டனையை வழங்குமாறு கல்லூரியின் பீடாதிபதிக்கு பணிப்புரை விடுத்திருப்பதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்கள் மிகவும் மோசமாக நடந்து கொண்டிருக்கின்றார்கள்.இவர்களுக்கு உரிய தண்டனையை வழங்குமாறு நான் கல்லூரியின் பீடாதிபதிக்கு பணிப்புரை விடுத்திருக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டங்களை அண்மித்த தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர்கள் 113 பேருக்கான நியமனங்கள் நேற்று கல்வி அமைச்சில் வழங்கி வைக்கப்பட்டது.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்¸கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் இணைந்து இதனை வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராதாகிருஸ்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.