143
தென் பசுபிக் நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவின் ரபாயுல் நகரத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
நில நடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பெரிய அளவில் பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. இந்த நிலநடுக்கம் நியூ பிரிட்டன் தீவிற்கு 128 கி.மீ. கிழக்கில், 33 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் அமெரிக்காவின் ஹவாய் தீவை மையமாக கொண்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், சுனாமி எச்சரிக்கை விடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Spread the love