Home இந்தியா ஓவியர் வீரசந்தானம் சென்னையில் இன்று காலமானார்:-

ஓவியர் வீரசந்தானம் சென்னையில் இன்று காலமானார்:-

by admin

ஓவியர் வீரசந்தானம் சென்னையில் இன்று காலமானார். 71 வயதான அவர் மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தமிழ் பற்றாளரும் சிறந்த ஓவியருமான வீரசந்தானம் உலக தமிழர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தவர். தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற ஈழத் தமிழர்களின் நினைவகத்தை தனது ஓவிய திறனால் நிஜமாக்கித் தந்தவர்.

கும்பகோணம் ஓவிய பள்ளியில் படித்து, மும்பையில நெசவாளர் பணி மையத்தில் டிசைனராக பணியில் சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து, தமிழ் இனத்துக்காகப் போராட வேண்டும் என்ற நோக்கோடு விருப்ப ஓய்வில் வெளியேறினார்.

கடந்த ஆண்டு அவருக்கு உடல்நலத்தில் குறைபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பல மாதங்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்து, நோயிலிருந்து மீண்டு, தமிழர் நலன் சார்ந்த பணிகளை மேற்கொண்டார்.

மதுக்கடைகளை மூடணும்; தமிழினத்தைக் காப்பாத்தணும்!’ என்பதுதான் அவரின் கடைசிக்கால கோரிக்கையாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தில் அதி தீவிர செயற்காட்டாளராகவும், கருத்தாளராகவும் இருந்த அவர் இறுதிவரை தனது கடின நிலைப்பாட்டில் இருந்து மாறாதவர்..

இயக்குனர் அருள் எழிலன் இயக்கி, பூரணி கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்காக நடராஜா குருபரன் தயாரித்த கள்ளத் தோணி குறும்படத்தில் நடித்தவர். இந்தப் படம் 2012 ஆம் ஆண்டுக்கான நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் குறும்படப் போட்டிப் பிரிவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

16 ஏப்ரல் 2012 –
கள்ளத்தோணி பற்றி மறவன்புலவு சச்சிதானந்தன்:-

 

கள்ளத்தோணி, 1948களுக்குப் பின் 1960 வரை தென்கடலிலும் வடகடலிலும் எதிர் எதிர் கரைகளுக்கிடையே பல்லாயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்த படகுப் பயணிகளைப் புதிதாக அழைக்கப் புழங்கிய சொற்றொடர். கொழும்பு மேலாட்சியாளர் மட்டுமல்ல, தமிழகக் கரைகளிலும் ஈழத்தின் வட, வடமேற்குக் கரைகளிலும் வாழ்ந்தோர் வழங்கிய சொற்றொடர். அந்தச் சொல்லுக்கும் கொழும்பு கொம்பனித் தெரு முகாமுக்கும் நெருங்கிய தொடர்பு. கள்ளத் தோணியில் வந்து இலங்கைகக் கடற்படையிடம் (தலைவர், தமிழரான அட்மிரல் கதிரகாமர்) கைதாவோர் சேருமிடம். 1960க்குப் பின்னர் ஆள்கள் பயணிப்பது குறைந்து பொருள்கள் கடத்துவோராக அப்படகுகளைக் கருதினர். தமிழகக் கரையோரத்தில் கைதாகாது ஈழக் கரையோரங்களில் கைதானோருள் பெரும்பாலானவர் வல்வெட்டித்துறைக் கடலாடிகள்.

1980க்குப் பின்னர் இப்படகுகள் போரளிகளுக்கும் அப்போர்வையில் கடத்தல்காரருக்கும் உதவியதாகச் இலங்கை அரசு கருதிப் படகுகளைச் சுட்டது. 1983க்குப்பின், தமிழகக் கரையோரங்களை வந்தடைந்த புகலிடம் தேடுவோரிடம் இந்தியக் கடலோரக் காவற்படை கைப்பற்றிய 1000 படகுகளில் 500க்கு மேல் இன்னமும் திரும்பாமலே உடைந்தும் களவுபோனதுமான கள்ளத்தோணிகள். 2009க்குப் பினனர் தமிழகக் கரைகளில் இருந்து ஈழத்துக்குத் திரும்புவோர் கள்ளத்தோணிகளில் போவதான கருவைக் கொண்ட குறும்படத்தை அருள் எழிலன் இயக்கியுள்ளார், நேற்று 14.4.12 மாலை, என் வீட்டருகே எழும்பூர், இக்சா அரங்கில் அக்குறும்படத்தைப் பார்த்தேன். ஓவியர் மருது, கவிஞர் சேரன், ஓவியர் வீரசந்தானம் மற்றும் கலைஞர்களின் பங்களிப்புடன் ஈழத் தமிழரின் அவலங்களை எடுத்துரைக்கிறார் அருள் எழிலன். யாழப்பாணத் தமிழர் ஒரு சிலர், முன்பு கள்ளத்தோணி என்ற சொல்லுடன் வடக்கத்தையான் என்ற சொல்லையும் சேர்த்து இழிசொல்லாகப் பயன்படுத்திய காலம் மாறி, தமிழகத் தமிழர் ஒரு சிலர், ஈழத் தமிழரையும் குற்றவாளிகள், கொடுமையாளர் எனப் பார்த்து இழிக்கும் நிலை இன்றுள்ளதைப் படமாக்கிய அருள் எழிலனின் கண்ணோட்டத்தைப் பாராட்டுகிறேன். தமிழரிடையே புரிந்துணர்வு பெருக இக்குறும்படம் வழிகாட்டும். ஈழத் தமிழரின் அவலங்களின் மிகச் சிறு பகுதியை, குறும்படமாக்கிய அருள் எழிலன் தொடர்வார், படங்கள் தருவார்.

14 செப்டம்பர் 2011 – Comments (0)
14 செப்டம்பர் 2011 – Comments (0)

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More