கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரி போராட்டம் தொடந்து நடைபெற்று வரும் நிலையில் நேற்றையதினம் 29வது நாளாக முழு அடைப்புப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது போராட்டக்காரர்கள் அரச கட்டிடங்கள், வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். அத்துடன் சுற்றுலாத் துறை அமைச்சர் கவுதம் தேவ்வின் கார் மீதும் தாக்குதல் மேற்கொண்டதனால் டார்ஜிலிங் பகுதியில் பதற்றம் நிலவுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்குவங்க மாநிலத்தின் பிரபலமான சுற்றுலாத் தலம் டார்ஜிலிங் உட்பட சில மலைப்பகுதிகளைப் பிரித்து, கூர்க்காலாந்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்காக மலைப் பகுதிகளைச் சேர்ந்த 15 அரசியல் கட்சிகள் சேர்ந்து கூர்க்காலாந்து இயக்க ஒருங்கிணைப்பு கமிட்டியை உருவாக்கி உள்ளனர்.
இந்த அமைப்பினர் கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.