3,500 சிறுவர் ஆபாசப்பட இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் உச்சநீதிமன்றில் அறிவித்துள்ளது.
சிறுவர் ஆபாசப்பட இணையத்தளங்களில் வெளியிடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு விசாரண இன்று இடம்பெற்ற போது அது தொடர்பில் பதிலளிக்கையிலேயே மத்திய அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு சார்பில் முன்னிலையாகி பதிலளித்த கூடுதல் அரசுத்தரப்பு வழக்கறிஞர் பிங்கி ஆனந்த், மேலும், பாடசாலை பேருந்துகளில் ஜாமர் வசதி பொருத்துவது சாத்தியமல்ல எனவும் பாடசாலை வளாகங்களில் ஆபாசப்படங்கள் பார்ப்பதை தடுக்கும் வகையில் ஜாமர் கருவிகள் பொருத்தலாமா என்பது குறித்து பரிசீலிக்குமாறு கல்வித்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை ஏற்றுகொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக இரண்டு நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசை கேட்டுகொண்டுள்ளனர்.