கிழக்கின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைமைக் காரியாலயம்இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாகாண அமைச்சர்களான ஏ எல் எம் நசீர் ,கே,துரைராஜசிங்கம் மற்றும் பிரதி அவைத்தலைவர் இந்திரகுமார் பிரசன்னா, மாகாண சபை உறுப்பினர்களான ஷிப்லி பாறூக் ,மா நடராஜா ,கே கருணாகரன் ஆகியோரும் பங்கேற்றனர்.
கிழக்கில் ஒவ்வொரு மாவட்டங்களில் காணப்படும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளப்படுத்தி அவற்றை அபிவிருத்தி செய்து சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்திலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.