குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பயணத் தடையினால் நெருங்கிய உறவினர்களுக்கு பாதிப்பு கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.
தாத்தா, பாட்டி மற்றும் ஏனைய நெருங்கிய உறவினர்கள் அமெரிக்கப் பிரஜைகளை பார்வையிட வருவதனை தடுக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹவாய் நீதிமன்றின் மாவட்ட நீதவான் டெறிக் வட்ஸன் ( Derrick Watson ) இது குறித்து அறிவித்துள்ளார். ஆறு முஸ்லிம் நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பது தொடர்பில் ட்ராம்ப் தடை விதித்திருந்தார்.
தாத்தா, பாட்டி, பேரப்பிள்ளைகள், மைத்துனர், மைத்துனி, மாமா, மாமி உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களுக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.