279
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட உள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கடந்த ஆறு மாத காலப்பகுதியில் டெங்கு நோயினால் 269 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் நாடு முழுவதிலும் டெங்குவினால் 89, 000 பேர்வரையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரப் பணியாளர்களும் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
Spread the love