முல்லைப் பெரியாறு அணை வழக்கு தொடர்பில தமிழக அரசு பதில் அளிக்க, உச்ச நீதிமன்றம் 3 வாரங்கள் காலஅவகாசம் வழங்கியுள்ளது.
தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள கேரளா அனுமதி மறுக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது
இதுகுறித்து கேரள அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு அனுமதி வழங்க முடியாது எனவும் அணையை பராமரிக்கும் பணியை தமிழக அரசு மேற்கொள்ளக்கூடாது எனவும் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் கேரள அரசின் மனு குறித்து பதில் அளிக்க தமிழகம் சார்பில் அவகாசம் கோரப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் 3 வாரங்களில் பதில் அளிக்க காலஅவகாசம் அளித்துள்ளனர்