பசுவதை தடுப்பு சட்டத்தைக் கண்டித்து வரும் 18ஆம் திகதி டெல்லி ஜந்தர்மந்தரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ளது. இதில் அனைத்துக்கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள் என அக்கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை அறிவிப்பை தொடர்ந்து 32 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதையும், தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வரும் செயலை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நேற்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.