161
முல்லைத்தீவு மாவட்டத்தில் காடழிப்பினை மேற்கொண்டு திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொள்ள உள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய எதிர்ப்பு போராட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கூழாமுறிப்பு எனும் பகுதியில் உள்ள சுமார் 177 ஏக்கர் காட்டினை அழித்து குடியேற்றங்கள் மேற்கொள்ளபட உள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திற்கு அருகில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் கூழா முறிப்பு சுமார் 7 கிலோ மீற்றர் தூரம் மக்கள் பேரணியாக நடந்து சென்றனர்.
குறித்த போராட்டத்திற்கு அணிதிரளுமாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக சட்டவிரோத குடியேற்றங்களை எதிர்க்கும் இளைஞர் அணி எனும் அமைப்பு அழைப்பு விடுத்து இருந்தது.
Spread the love