159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சமூக ஊடக வலையமைப்புக்களினால் ஆட்சி அமைக்கவும் முடியும் எனவும் ஆட்சியை கவிழ்க்கவும் முடியும் என பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் சமூக ஊடக வலையமைப்புக்களுக்கு தடைகளை விதிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சமூக ஊடக வலையமைப்புக்களின் ஊடாக பேசப்படும் விடயங்கள் பற்றி புரிந்து கொள்ளக்கூடிய பக்குவம் அதிகாரிகளுக்கு இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இளைஞர் யுவதிகள் தங்களது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு சமூக ஊடக வலையமைப்புக்களை மட்டும் பயன்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love