இராணுவத்தினர் வசமுள்ள கேப்பாப்புலவு மக்களின் 189 ஏக்கர் காணிகள் இன்று புதன்கிழமை விடுவிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்துள்ளது.
தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்புலவு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பாதுகாப்பு தரப்பினருடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் இன்று குறித்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த காணியில் உள்ள படையினரின் முகாம்களை அகற்றுவதற்காக 50 லட்சம் ரூபா வழங்கப்பட்டதாகவும் அங்குள்ள கடற்படை முகாம் வேறு இடத்தில் நிறுவப்படும் என்றும் மீள்குடியேற்ற அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதமும் 279 ஏக்கர் காணிகள் கேப்பாப்புலவில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.