குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலியாவில் முதல்முறையாக தீவிரவாத தடுப்புக்காக தனி அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தீவிரவாதம் மிகப் பெரும் பிரச்சினையாக உருவெடுத் துள்ளதாகவும் இதனைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அந்நாட்டு பிரதமர் மல்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் தீவிரவாத அச்சுறுத்தல்களைச் சமாளிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன் ஒருபகுதியாக உளவுத் துறையை மேம்படுத்தவும் உள்நாட்டுப் பாதுகாப்பை பலப் படுத்தவும் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. தற்போது தீவிரவாத தடுப்புக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் பாதுகாப்பு மேம்படும் என அவர் தெரிவித்துள்ளார்.