188
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவா்களது உறவினர்களின் போராட்டம் இன்று புதன் கிழமை 150 வது நாளை எட்டியுள்ளது.
150 ஆவது நாளாக தொடர்ச்சியாக இரவு பகலாக காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனா்.
நல்லாட்சி அரசின் ஜனாதிபதி கூட காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை சந்தித்து பல வாக்குறுதிகளை வழங்கிய போதும் அது இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில் 150 வது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனா்.
Spread the love